உலகம் முழுவதும் ரமலான் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது
மதுரை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அம்ஜத் கான் கூறியதாவது..
.மதுரை மாவட்டம் முழுமைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 24 இடங்களில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடல் தொழுகை நடத்தப்பட்டது.மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரமலான் பெருநாள் திடல் தொழுகையில் மதுரை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அம்ஜத் கான் தலைமை ஏற்று தொழுகையை நடத்தி வைத்தார் .திடல் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.தொழுகை முடிந்த பின்னர் தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் ஆரத்தழுவி ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .பின்னர் ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து ரம்ஜான் பெருநாளை கொண்டாடினார்கள். –
ரமலான் திருநாளை முன்னிட்டு பெருநாள் திடல் தொழுகை
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
