மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்ய துவங்கியது.
இந்த நிலையில் மேலூர் சிவகங்கை சாலையில் உள்ள தென்னை மரம் ஒன்றில் திடீரென இடி தாக்கியதில் அதில் தீ பிடிக்க துவங்கியது.

இதனால் சிவகங்கை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தீப்பொறி பறந்தால் அவர்களுக்கு சற்று இடையூறு நேரிட்டது. தகவலறிந்து வந்த மேலூர் தீயணைப்பு வீரர்கள் தென்னை மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



