• Thu. Dec 12th, 2024

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

ByA.Tamilselvan

Aug 17, 2022

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழ்நாட்டிற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று உள்ள திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின், சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.