பெரியகுளம் நகராட்சியில் இரண்டு மாதம் (பிப்ரவரி மற்றும் மார்ச்) சம்பளத்தை வழங்கக்கோரி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இன்று (5.4.2022) காலை ஆறு மணிக்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடக்க இருந்தது! இந்நிலையில், ஒப்பந்ததாரர் சுதாகர் மற்றும் ஏஐடியுசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார், தலைவர்கள் கே.பிச்சைமுத்து, எம்.கர்ணன் மற்றும் நிர்வாகிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது!
அதில், இன்று ஒரு மாதம் சம்பளம், நாளை ஒருமாதம் சம்பளப் பாக்கியை கொடுத்து விடுவதாக
ஒப்பந்ததாரர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் ரத்து செய்யப்பட்டது.