• Sat. Jun 10th, 2023

ஓமைக்ரான் அச்சத்தில் சினிமா உலகம்

கொரோனா மூன்றாவது அலை ‘ஒமிக்ரான் மெதுவாக பரவி வருகிறது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவடஇந்தியமாநிலங்களில் 100% அனுமதியை 50 % மாக குறைக்க தொடங்கியுள்ளது.


நாட்டின் தலைநகரான டில்லியில் தியேட்டர்களை முழுவதுமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல் எவ்வளவு நாளைக்கு என்பது பற்றி மாநில அரசு அறிவிக்கவில்லை.இதன் காரணமாக ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர்ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ள வலிமை, ராதேஷ்யாம்ஆகிய படங்கள் பாதிக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அடுத்த பத்து நாட்களுக்குள் மேலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் இரவுக் காட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இன்னும் சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த வாரம் வெளியாவதாக இருந்த ‘ஜெர்ஸி’ படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சினிமாவில் தீபாவளிக்கு அடுத்ததாக தமிழகத்தில் பொங்கல் பிற மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகை யை முன்னிட்டு புதிய படங்கள் வெளியிடுவது வாடிக்கை வழக்கமான நாட்களை காட்டிலும் பொங்கல், தீபாவளி பண்டிகை வெளியீட்டில் தியேட்டர்களில் மொத்த வசூல் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும்.


தற்போது பரவி வரும் கொரோனா மூன்றாவது அலை சினிமாவுக்குஎன்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை எண்ணி தமிழ் சினிமாஅச்சத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *