• Thu. Jun 1st, 2023

ஆண்டிபட்டியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை. கும்பலை சேர்ந்த இருவர் கைது. போலீசார் விசாரணை.

ஆண்டிபட்டி பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பலை சேர்ந்த இருவர் போலீசில் சிக்கினார். ஆண்டிபட்டி டி.வி.ரெங்கனாதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (26). இவர் மதுரையை சேர்ந்த தனது நண்பர்கள் மணி, வசந்த் ஆகியோருடன் வீட்டருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆண்டிபட்டி எஸ்.ஐ., மாயன் அந்த வழியாக ரோந்து சென்ற போது இவர்களை பிடித்து விசாரித்தார். அப்போது மணி, வசந்த் ஓடி விட்டனர்.

சுரேஷ்குமார் மற்றும் பாபு சிக்கிக் கொண்டனர். அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது. இவர்கள் இந்த இடத்திலும், சுற்றுப்பகுதியிலும் நின்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இரண்டு நபர்களையும் கைது செய்து ,சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *