• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

போலி ஆதார், வாக்காளர் அட்டை பெற்று திருவாடானை தொகுதியில் வாக்களித்ததால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

May 15, 2026

இலங்கை கொழும்பு அருகே உள்ள கொட்டாசானை பகுதியைச் சேர்ந்தவர் பாட்சா மைதின் இவரது மகள் முகம்மது ஷபிர் ( வயது 65 )இவரது மனைவி
அபினா பேகம் (வயது 57) இவர்கள் இலங்கை குடியுரிமை பெற்று இலங்கையில் வசித்து வந்தாலும் இவர்களது உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பகுதிகளில் ரசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இலங்கையில் இருந்து தமிழகம் வந்த முகமது சபீர் மற்றும் அபினா பேகம் ராமநாதபுரம் மாவட்டம்
திருப்பாலை குடியில் தங்கியுள்ளனர்.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவாடனை தொகுதிக்குட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்களித்துள்ளனர் இதனைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தபோது வாக்களித்த விவரம் தெரியவந்தது இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் தமிழகத்தில் குறிப்பா ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு தங்களுக்கு இங்கேயும் வாக்குரிமை உள்ளது என கூறியதை எடுத்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர் அதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து அவர்களை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்தனர் .

இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகம் திருவாடனை பகுதியில் போலி ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது .

இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்து மதுரை வந்த பயணிகளிடம் மதுரை விமானநிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் . வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் வாக்காளராக வாக்களித்தது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது .