மலையாள சினிமாவில் மோகன்லால்-பிரித்விராஜ் இடையிலான உறவு குரு- சிஷ்யன் போன்றது என்பார்கள் அதனால் தான் நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறியபோது அவரது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அவரது ஆதர்ச நாயகன்மோகன்லால்..அந்தப் படம் மலையாளத்தில் வணிகரீதியாக வெற்றிபெற்றது
பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கிய ப்ரோ டாடி படத்திலும் மோகன்லால் தான் நாயகனாக நடித்துள்ளார் குரு-சிஷ்யன் போன்ற ஆழமான நட்பின் காரணமாக தான், மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகும் பாரோஸ் என்கிற படத்தில் குருவுக்கான மரியாதையாக பிரித்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மோகன்லால் இயக்கவிருந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது இன்னொரு பக்கம் பிரித்விராஜ் முடித்துக்கொடுக்க வேண்டிய படங்களின் வேலைகள் அதிகமாகிவிட்டது. அந்தவகையில் மோகன்லால் படத்திற்காக இவர் ஒதுக்கிய தேதிகள் எல்லாம் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பயன்படுத்த முடியாமல் போனது.
கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பமான சமயத்தில் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டது இதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆடுஜீவிதம் படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை மீண்டும் வெளிநாடுகளில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக பிரித்விராஜ் வெளிநாடு செல்லவேண்டியிருப்பதால் உள்ளூரில் முடிக்கவேண்டிய படங்களின் பணிகளை முடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
இதனால் மோகன்லால் படத்தில் இருந்து பிரித்விராஜ் விலகிவிட்டார் என்கிற செய்தி மலையாள சினிமா, ஊடக வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.