சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றார் அதிக பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நேற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுகவில் இரண்டு அணியாக பிரிந்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நேற்று தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த 15க்கு மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர் பதவியை பறித்து பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
அதேபோல் புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அவருடைய மாவட்ட செயலாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளை எடுத்துவிட்டு புதிய மாவட்ட செயலாளராக தொழிலதிபரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளருமான பழனிவேலுவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக அறிவித்தார்.

புதிதாக மாவட்ட செயலாளராக பதவி ஏற்று கொண்ட பழனிவேலு இன்று புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வருவதாக அறிந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் குவிந்ததால் தற்பொழுது அதிமுக அலுவலகம் நுழைவாயில் கேட்டு பூட்டப்பட்டு நுழைவாயில் முன்பு துப்பாக்கி ஏந்திய பத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிமுக அலுவலகத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




