• Thu. May 14th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத தொகுதியாக மாற்ற உறுதி..,

BySeenu

May 14, 2026

அ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட கோவை கிணத்துகடவு தொகுதியில் முதல்முறையாக தேர்தல் களத்தில் குதித்த தவெக வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று, அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தார்..

இந்நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த அவருக்கு த.வெ.க.கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு வழங்கினர்..

சட்டமன்ற அலுவலக வளாகத்திலே பொதுமக்களிடம் பேசிய அவர்,தற்போது குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக , குடிநீர் வடிகால் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாக கூறினார்..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக தனது நொகுதியக மாற்றுவேன் என உறுதியாக கூறிய அவர்,சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவிற்கு தொட மாட்டேன் என உறுதி கூறுவதாக தெரிவித்தார்..

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் தனி சிறப்புகள் இருப்பதை போன்று கிணத்து கடவு தொகுதியையும் அனைத்து வசதிகள் கொண்ட தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர்,குறிப்பாக மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டை தமது தொகுதியில் முழுமையாக ஒழிப்பதே இலட்சியம் என தெரிவித்த அவர்,தனது கிணத்துகடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை கடந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் பொதுமக்களை திரட்டி காவல்நிலையத்தை முற்றுகை இடுவேன் என அதிரடியாக தெரிவித்தார்..

தமது தொகுதியில் நீண்ட காலமாக இருக்கும் வெள்ளலூர் குப்பை கிடங்கு தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்..