கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு டேனியல் ஸ்போட்ஸ் அகடாமி கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் கத்தார், துபாய் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றனர் மேலும் கட்டாக் .சுமித்து உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது 5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் ஆண் பெண்கள் வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சுந்தர், செயலாளர் சண்முகம் .பொருளாளர் பிரேம்குமார் மற்றும் பொன்ஜெஸ்லி கல்லூரி முதல்வர் பொன் ராபர்ட்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.