தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அனைவரையும் உலுக்கிய செய்தி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தான். இந்தநிலையில், வாழ்ந்து தான் போராட வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்..
உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக, உங்கள் சகோதரனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக் கொள்கிறேன். உங்களை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம், நான் இருக்கிறேன், அரசாங்கம் இருக்கிறது.” என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தநிலையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் தேங்கியுள்ள போக்சோ வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.