

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை கிளைக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணியின் சார்பில் கே கே எஸ் எஸ் ஆர் ரமேஷ் கலந்து கொண்டு ஏழாயிரம்பண்ணை முக்கு திடலில் திராவிட முன்னேற்றக் கழக கொடியை ஏற்றி கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்து பிரியாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை கழக ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் 7000 பண்ணை கிளைக் கழக செயலாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


