

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தில் சாம்பல் நிற அணில்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல இங்கு சாம் பல் நிற அணில்களும் உள்ளன. இப்பகுதி முன்பு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அழைக்கப்பட்டும்
இப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதாலும், உணவுகள் கிடைப்பதாலும் இந்த அணில்கள் இங்கு மட்டுமே காணப்படும். இந்த அரிய வகை சாம்பல் நிற அணில்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. ஆண்டுதோறும் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தற்போது 2 நாட்கள் 41 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த கணக்கெடுப் பின்போது சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

