புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் 13 புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் NILP(New India Literacy Programme) மையங்கள் செயல்படுகிறது. இம் மையங்களில் 230 கற்போர் பயில்கின்றனர். இம் மையங்களுள் கடையக்குடி புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

அப்போது மையத்தில் 18 கற்போர் இருந்தனர். தன்னார்வலராக கவிதா பணி புரிந்தார். கற்போர்களான லெட்சுமி, சின்னாத்தாள், வள்ளி, வசந்தாள் ஆகியோரின் வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு செய்து மையம் சிறப்பாக செயல்படவும், கற்றல் உபகரண பொருட்கள் பயன்படுத்திடவும், தன்னார்வலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இவ்வாய்வின் போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளியின் தலைமையாசிரியர் சே.பேச்சியம்மாள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சு. சுகன்யா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ரெ.ராஜா மற்றும் ஆ.பாலசுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.




