புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜ வீதியில் நகர் மன்றத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரரான கர்ணன் அலுவலகத்திலும் முத்துப்பட்டினத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு, ஏம்பலில் உள்ள குமரராஜா என்பவரது வீடு, குளந்திரான்பட்டில் உள்ள அரசு ஒப்பந்ததாரரும் முன்னாள் மணல் ஒப்பந்ததாரராக இருந்த கரிகாலனின் பண்ணை வீடு ஆகிய பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒரு சில பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் சோதனைக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தவில்லை.

ஏற்கனவே மணல் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்க துறையினர் வருமானவரித் துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்தி வந்த நிலையில் அந்த சோதனையின் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
