• Fri. Nov 13th, 2026

கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் மாணவிகளுக்கு வழங்கிய எம்வி கருப்பையா..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல் பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா வழங்கினார்.

முன்னதாக குழந்தைகளின் இன்றைய செய்தித்தாள் வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு எம் எல் ஏ மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி தொடக்கக்கல்வி அலுவலர் பள்ளி தாளாளர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் ஜவஹர்லால் நேரு படத்திற்கு மரியாதை செய்தனர்.

மாணவிகள் தங்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி கூடுதல் கட்டிடம் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்கள். தொடர்ந்து பேசிய எம் எல் ஏ தமிழக முதல்வர் அவர்கள் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். குழந்தைகளுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குழந்தைகள் முதல்வர் அவர்களை அன்போடு மாமா என்று அழைத்து வருகின்றனர். அவர்களுக்காகவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன் இதற்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் சோழமந்தான் தொகுதி மக்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழன் தாமு சரவண கண்ணன் பசுமணியன் வக்கீல் தியாகராஜன் விக்னேஷ் பங்களா மூர்த்தி அலங்காநல்லூர் பாலாஜி புதுப்பட்டி பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.