• Fri. Nov 13th, 2026

மதுரையில் தனிஷ்க் நகைகடை கொள்ளை வழக்கு சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைகடையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் 10 கிலோவிற்கு மேலான தங்க நகைகள் 1 கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 9 தனிப்படையினர் பல்வேறு இடங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மதுரை நேரு நகர், பழங்காநத்தம் மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த நிலையில் முகமூடி அணிந்தபடி நகைக்கொள்ளையில் ஈடுபட்ட நபர் மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு பகுதியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி நகர் பகுதி வரை வந்துள்ளது தெரியவந்துள்ளது

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரின் வீட்டில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான காவல்துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

வீட்டிற்குள் இளைஞரின் பெற்றோர் உள்ள நிலையில் அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இளைஞர் இருக்கும் இடத்தை நோக்கி காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்