மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று (13.11.2026) அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கியும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அஜய் யாதவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர் திருமதி. லோகநாயகி அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சண்முகம் அவர்கள், மகளிர் திட்ட அலுவலர் திரு. பாலசுந்தரம் அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்( பொறுப்பு) திரு.ஸ்ரீதர் அவர்கள்,மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி. சோபா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்( சத்துணவு) திரு. அன்புச்செழியன் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் திரு. சந்திரசேகர் அவர்கள், ஆலங்குடி வட்டாட்சியர் திரு. ராஜதுரை அவர்கள், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. பால்ராஜ் அவர்கள், திரு.வெங்கடேசன் அவர்கள், மற்றும் தலைமையாசிரியர் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைத்துத்துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
