• Fri. Nov 13th, 2026

வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..,

Byமுகமதி

Nov 13, 2026

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ச. மரிய விமலா ஜான்சி ராணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஷீலா, அறிவொளி கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறையின் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆர்.சுந்தர்ராஜ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

விழாவில், தமிழக அரசு வழங்கிய கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஆசிரியை ஆர்.நித்திய வாணி, கல்வியாளர் பரமநகர் செல்வி மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் மாணவ, மாணவிளை பாராட்டினர்.