• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் சதுரங்கம் — ஓவியப்போட்டி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்பனா சாவ்லா நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது, 10 ,12, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான பரிசளிப்பு விழா ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது .வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் ,கோப்பையும் ,சான்றிதழும் , ரொக்க தொகையும் வழங்கப்பட்டது .நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ,ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் சந்திரகலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் .அறக்கட்டளை நிர்வாகி சாந்தி குமார் வரவேற்று பேசினார் . நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மன் ஆ. ராமசாமி, திமுக நகர செயலாளர் பூஞ்சோலை சரவணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் சாந்தி கவுன்சிலர் முத்துராமன் இணைச் செயலாளர் சுசிலா ஆகியோர் செய்து இருந்தனர் .