• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சென்னை மருத்துவக் கல்லூரி
மாணவர் விடுதியில் தீ விபத்து…!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரலில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் விடுதிகளும் இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றி அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முன்னெச்சரிக்கையாக அருகில் இருந்த அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது.