• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் மட்டும் இல்லை என்றால் அதிமுகவை அடுத்த கட்சியில் அடமான வைத்திருப்பார்கள்-ஆ.பி.உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Oct 12, 2026

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இனி மீண்டும் எள் முனையளவும், கடுகளவும் பின்னடைவு இல்லாமல் எந்த சிதைவும் ஏற்படுத்தாமல் அண்ணா திமுக தான் உயிர், எடப்பாடியார் தான் உலகம் என்று உழைத்துக் கொண்டிருக்கிற தொண்டர்களை நாம் கருத்தில் கொண்டு கவனத்திலே கொண்டு
புதிய வரலாற்றை அண்ணா திமுகவுக்கு பெற்றுத் தர அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும் எனக் கூறினார்.

பொதுவாக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குத்தான் களம் சாதகமாக அமையும் என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். தற்போது நடந்து முடிந்திருக்கிற இடைத்தேர்தலில், தமிழகம் தவிர புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், பாஜாக கூட்டணி சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இரு தொகுதிகளிலும் ஆளும் பாஜக கட்சி பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல அசாமில் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சியான பாஜகவெற்றி கொடி நாட்டியிருக்கிறது. மொத்தத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

கடந்த ஏப்ரல் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பனார்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக மக்களின் நம்பிக்கைக்குரிய முதல்வராக பதவி வைத்த மம்தாவுக்கு வரலாறு காணாத தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை நோக்கி மம்தா பானர்ஜி .கட்சியிலிருந்து பலர் கட்சி மாறினார்கள். தற்போது நடந்த நந்திகிராம்-ரெஜிநகர் ஆகிய இடைத்தேர்தலில், வெற்றி கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தால், ஆனால் இரண்டு தொகுதிகளிலும் ஆளுகிற கட்சி பாஜகவிற்கு தான் வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் ரெஜிநகர் தொகுதியில் மம்தா வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. வெறும் 3847 ஓட்டுகள் மட்டுமே வாங்கியிருக்கிறார். இதுதான் இடைத்தேர்தல்கள நிலவரம்.

புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களால் தொடங்கிய கட்சி, அண்ணாதிமுக, பல சவால்களை சந்தித்து தொடர்ந்து வெற்றிப் பாதையில்‌ பயணித்து வந்தாலும் கூட, அம்மா இருக்கிற போதும் அண்ணா திமுக பல சவால்களை சந்தித்து வெற்றி வரலாறு படைத்திருக்கிறது. பின்னடைவையும் சந்தித்திருக்கிறது.

அதில்குறிப்பாக 2010 பென்னாகரத்திலே டெபாசிட் இழந்த அண்ணாதிமுக, 2011ல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத வகையில் மக்கள் மகத்தான தீர்ப்பை அளித்தார்கள். ஆர் கே நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழந்தது 2021ல் திமுகவை ஆட்சி அமைக்கின்ற வகையிலே மக்கள் தீர்ப்பளித்தார்கள்.

ஆகவேதான் இப்போது அண்ணா திமுக தொண்டர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? வாக்கு வங்கியை உயர்த்த அதற்காக நம்ம வேலை பார்க்கணும், உழைக்கணும். வாக்கு வங்கியை உயர்த்த நாம் களத்திலே உழைக்கணும். இதுதான் அண்ணா திமுகவின் தொண்டர்களுடைய தற்போதைய எண்ணமாகவும் சிந்தனையாகவும் தற்போதைய அவசர நடவடிக்கையாகவும் அமைய வேண்டும்.

40 சதவீதலிருந்து25 சதவீதமாக அதிமுக வாக்கு வங்கி சரிவை சந்தித்திருக்கிறது என்று சொன்னால், புதிய கட்சிகளால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். திமுக அண்ணாதிமுகவை பின்னடைவு ஏற்படுத்த முடியவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய வரவுகளின் கவர்ச்சி, வசீகரத்தால் அண்ணா திமுகவுடைய வாக்கு வங்கி நமக்கு பின்னடைவை சந்தித்திருந்தால், அதை உயர்த்துவதற்கு நாம் களத்திலே என்ன செய்ய வேண்டும்? என்கிற சிந்தனைதான் நம்மிடம் மேலோங்கி இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் வெற்றி,தோல்வியை ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிமுக தோத்துருச்சுன்னா, கட்சியை கலைச்சிட்டு யாரும் போக முடியாது. மக்கள் நம்பிக்கையை பெறுகின்ற வகையிலே போராடத்தான் வேண்டும். தொடர்ந்து களத்திலே உழைக்க வேண்டும். மக்களுக்கான சேவையை விரிவுபடுத்த வேண்டும். இந்த கட்சிதான் உயிர், எடப்பாடியார் தான் உலகம் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்துக்கிட்டு இருக்கிற தொண்டர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? வெற்றித் தோல்வி வருகின்ற போது கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

இந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கையின் அனுபவத்தில் எடப்பாடியார் எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்கின்ற அன்பான அணுகுமுறையை அறிந்தவர்தான். அதே நேரத்திலே தேவையான சமயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காத மன உறுதி கொண்டவர் என்பதிலும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.
அவருடைய நிர்வாகத் திறனுக்கு பல சான்றுகள் இருக்கிறது. நான்கரை கால ஆட்சியில் ஒரே ஆண்டிலே 11 மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தார். 7.5% இட ஒதுக்கீடை சமூக நீதிக்காக கொண்டு வந்தார்கள். அவர் முதல்வராக பொறுப்பேற்கிற போது, அவருக்கு இருந்த சவால்கள் கட்சியை பார்க்கணும், இன்னொரு புறம் ஆட்சியை தக்க வைக்கணும். அவர் பொறுப்பேற்கிற போது ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியா இருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இரட்டை வெற்றி பெற்றவர்களே, அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய ஆட்சிக்கு எதிராக வாக்களித்த கொடுமையும் நம்ம சந்திச்சோம். இந்த கொடுமை எல்லாம் தாண்டிதான் எடப்பாடியார் ஆட்சி அமைச்சு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றாலும் கூட எ ஒரு வாரம் தாங்குவாரா? ஒரு மாதம் தாங்குவாரா? ஒரு ஆண்டு தாங்குவாரா? இப்படி எல்லாம் வந்து அவர் காதுபடவே விமர்சனம் செஞ்சாங்க. அதை பத்தி அவர் கவலை படவில்லை

. நம்ம செயல்தான் பேசப்படணும் என்ற வகையில் அம்மா அரசின் முழு ஆயுள் காலத்தையும் திறம்படச் செய்தார் கொரோனா,கஜா புயல் அத்தனையுமே திறம்பட கையாண்டு தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு சென்றார்.

10 ஆண்டு ஆண்டி இன்கம்பன்சி அண்ணா திமுக மேல அப்படி இருந்து 2021 தேர்தலில் அண்ணா திமுக கூட்டணியில் 75 பேர் வெற்றி பெற்றோம். அதேபோல 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்த எழுச்சி பயணத்தை ஓராண்டுக்கு முன்பாகவே 234 சட்டமன்றத் தொகுதிக்கு சென்றார்.

திமுக ஆட்சியின். மக்கள் விரோத போக்கை தோல் எடுத்து காட்டினார். இதுக்கு இடையில் விஜய் வந்து விசில் அடிச்சிட்டு போயிருவார். பெய்டு கண்டென்ட் கிரியேட்டர்ஸ் வச்சு பெய்டு இன்ப்ளுவன்சர்ஸ் வச்சு ஃபேக் வீடியோ வச்சு விஜய் ஒரு இமேஜ் பில்டப் பண்ணிக்கிட்டே வந்தார்.

விஜய் எந்த சமூக பங்களிப்பு இல்லை என்றாலும் கூட இந்த வசீகரம்,சினிமா கவர்ச்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது சீக்கிரத்துல வந்தது, சீக்கிரத்திலே போயிடும். அதுதான் வந்து இயற்கையினுடைய நீதி.

அதிமுக வாக்கு வங்கி சரிவு ஏற்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. அம்மா இருக்கும்போது வாக்கு வங்கி அதல பாலத்தில் போயிருக்கிறது. எல்லாத்துக்கும் தெரியும்.

அம்மாவின் அந்த கனிவான ஆளுமைக்கும், மனிதநேயமிக்க ஆளுமைக்கும் ஈடுகளே கிடையாது. அப்படிப்பட்ட அம்மாவின் அரசையே சில நேரங்கள் ஆதரிப்பதற்கு மக்கள் தவறி விடுகிறார்கள். அதை நினைச்சு அம்மா அதிமுகவை கலைச்சிட்டு போயிருந்தாங்கன்னா அண்ணா திமுக என்ற ஆலமரத்தினுடைய எதிர்காலம் என்ன ஆகும்? தொண்டருடைய எதிர்காலம் என்ன ஆகும்? மக்களுடைய எதிர்காலம் என்ன ஆகும்?

இப்ப புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருந்துபோது அமெரிக்காவில் படுத்துகிட்டே ஜெயிச்சார். அவர் இருக்கிற வரைக்கும் அண்ணா திமுகவுக்கு தோல்வியே இல்லை. ஆனா அவர் மறைவுக்கு பிறகு இந்த கட்சி இருக்குமான்னு கேட்டாங்க. அம்மா அதை தூக்கிப் பிடித்தார் உழைத்தார், பாடுபட்டார்.

ஆனாலும் அம்மாவின் ஆட்சி காலத்தில் 1991ல ஆட்சிக்கு வந்தார், 1996ல் ஆட்சி பறி போகுது.. 2001ல ஆட்சிக்கு வந்தார். 2006ல்ஆட்சி பறி போகுது. 2011, வந்தார் அதனை தொடர்ந்து 2016 ல் ஆட்சி அமைத்தார் உயிர் போகுது. இது எதுல நம்ம எப்படி எடுத்துக்கிறது? எப்படி நம்ம இதை பார்க்கிறது?

புட்சித்தலைவர் இருக்கிறபோது தோல்வியே இல்லை. அவரை எதிர்த்து நிற்கவே பயந்தார்கள் அம்மா வந்த பிறகு மாறி மாறி வெற்றி தோல்வி, வருது. அம்மாவின் மறைவுக்கு பிறகு இந்த அண்ணா திமுகவுக்கு எதிர்காலம் என்ன? ப எடப்பாடியார் ஒரு சவாலான நேரத்துல பொறுப்பேற்கிறார். அவருக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. எல்லாருக்கும் தெரியும்.

அம்மா காலத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி. இப்போ எடப்பாடியார் காலத்துல அது மாதிரி நடக்கலையே. ஒரு தோல்விக்கு அப்புறம் ஒரு வெற்றி வரணும் கேட்கிறது. நியாயம்தான். அதில் ஒன்னும் மாற்றுக் கருத்து இல்லை. 1996ல் தோல்விக்கு பிறகு இனிமேல் அம்மாவே இருக்க மாட்டாங்க. கட்சியே இருக்காதுன்னு எவ்வளவு பிரச்சாரம் பண்ணாங்க. அன்னைக்கு அம்மா இந்த கட்சியை இனிமேல் வேண்டாம். எதுக்கு இது? எதுக்கு இவ்வளவு அம்மா மீது 26 பொய் வழக்கு? நீதிமன்றத்தில் போய் ஏறி இறங்குனாங்க.

இனிமேல் இந்த கட்சி இருக்காதுன்னு இரட்டை இலையில் நிற்க ஆளே இல்லை. இதெல்லாம் வரலாறு. எல்லாத்துக்கும் தெரியும். ஒரு தோல்வி வந்துட்டால்.ஒரு கருத்து வேறுபாடு வர்றது. நீங்க விவாதிக்கலாம். தப்பு ஒன்னும் இல்லை. ஆனால் இயக்கத்தை எவ்வளவு பலவீனப்படுத்துவது?

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த இயக்கத்துக்காக உழைச்சுட்டு இருக்க அந்த சாதாரண தொண்டனை நினைச்சு பாருங்க. யாராவது இருந்தாலும் நான் யாரையும் வந்து குறிப்பிட்டு சொல்லவில்லை

பத்திரிக்கையில்செய்திகள் வந்து கொண்டே இருப்பதே நமக்கு ஒரு பெரிய கவலையை ஏற்படுத்துது.

அண்ணா திமுக எவ்வளவு பெரிய மக்கள் நம்பிக்கை பெற்றிருக்கிற இயக்கம். கேரளாவில் ஆளுங்கட்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதுஇங்க 1500 ஓட்டு வாங்கி இருக்காங்களே. அவங்க கட்சியை கலைச்சிட்டு போயிட்டாங்களா? அவங்க தலைவரை மாத்தணும்னு யாரும் சொல்றாங்களா? ஏன் மத்த கட்சிகள் எல்லாம் இந்த கொடுமை இல்லையே? நம்ம கட்சியில் மட்டும் இங்க ஜனநாயகம் இருக்குது.

நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்கில் ஒரு பங்கு வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம் இதை இன்னும் உயர்த்த என்ன வழின்னு. தொண்டர்களுக்கு நிர்வாகிகள் சொல்லுங்கள்

டெய்லி பத்திரிக்கையில் செய்திகள் வருவது நமக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எடப்பாடியார் என்கிற இந்த சாமானியரை நம்ம யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் முதலமைச்சராக இருந்திருக்கார் எதிர்கட்சித் தலைவரா இருந்திருக்கார் மிகத் திறம்பட திட்டங்களை கொண்டு வந்தார். இந்தியாவிலே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கினார்.

அம்மாவின் ஆட்சி அமைக்க யாரும் உழைக்காத வகையில் எடப்பாடியார் மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். இதில் எந்த மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. நான் உண்மையை தான் சொல்றேன்.

அவர் ஒத்த மனிதனாக இருந்து போராடுறார். எத்தனை எத்தனை வழக்குகள் போடுறது? எத்தனை போராட்டம் நடத்துறது? எத்தனை தடவை நம்ம வந்து அபிடேட் வாங்குறது? எத்தனை தடவை பொதுக்குழுவில் தீர்மானம் போடுறது? அவரும் இல்லைன்னா அதிமுகவை அடுத்த கட்சியில அடமானம் வச்சிட்டு போயிருவாங்க. அதில் ஒன்னும் சந்தேகம் இல்லை.

எப்படித்தான் இத்தனை அவதூறுகளையும் தாண்டி அவர் தாங்கிறார் அவருக்கு கோடி புண்ணியம்.

இந்த கட்சியை காப்பாத்த தொண்டர்கள் உழைச்சுக்கிட்டே இருக்காங்க. சாகுற வரைக்கும் இதில் இருந்துட்டு போறோம் எங்களுக்கு ஒன்னும் தேவையில்லை என சொல்றாங்க இல்ல. அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?

புரட்சித் தலைவருடைய தொண்டர்கள். அம்மாவுடைய தொண்டர்கள் எடப்பாடியார் கட்சிதான் உயிர்ன்னு இருக்காங்களே. எடப்பாடியார் தான் உலகம்னு வாழ்கின்றனர்

இப்ப தவெகவில் சேர்ந்து மரகத குமரவேலும், சத்தியபாமாவும் இன்னைக்கு ஜெயிச்சிட்டாங்க இதனால் விலைவாசி எல்லாம் குறைஞ்சிருமா? அரிசி விலை குறைஞ்சிருமா? மின்சார கட்டணம் குறைஞ்சிருமா? சட்ட ஒழுங்கு சீரழிஞ்சிருமா? இல்ல பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? என்ன நடக்கும்?

விஜய் தேர்தல் பரப்புரையில நிறைய பேசினார். அதில் இவங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குவாங்களாம். அதாங்க நம்ம பாசிசமும் பாயாசமும். இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம். அதை வந்து நாங்க நம்பனுமா? மக்கள் நம்பனுமா? வாட் ப்ரோ? இட் இஸ் வெரி ராங் ப்ரோ. ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி கொள்ளை அடிக்கிறதுக்காக பாஜகவோட மறைமுக கூட்டணி வாழ்க்கை ஒரு வட்டம் ப்ரோ என்று பேசினார் தற்போது இடைத்தேர்தலில் டிவிகேவோட புதுசா ஒரு பிரான்ச் ஓபன் பண்ணி இருக்காங்க. அந்த பிரான்ச் பிஜேபியயோட பிரான்சாக இருந்துச்சு. அப்படின்னு அப்ப சொன்னாரு. அப்ப புரியல. ஏதோ தவறா சொல்லிட்டாருன்னு நினைச்சோம் தற்போது இரட்டை நிலைப்பாடு விடுபட்டு வருகிறது.

திமுக என்ன செஞ்சாங்க அரசுக்கும் அரசியலுக்கும் பாதுகாப்பு வேணும் போது பிரதமரை வரவேற்பாங்க பாதுகாப்பு கிடைச்ச உடனே வரவேற்புக்கு என்டுகார்டு போடுவாங்க அதையே தானே விஜய் செய்றார்.

அரசுக்கும் , ஆட்சிக்கும் அவருடைய அரசியலுக்கும் பாதுகாப்பிற்காக வரவேற்க போயிருக்காரு . எப்ப என்டு கார்டு போடுவாருன்னு நமக்கு தெரியல.

அதிமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் 25 பேர் ஓட்டு போட்டங்க அவங்களுக்கு அமைச்சர் பதவின்னு சொன்னாங்க ஆனா அமைச்சர் பதவி இல்லாம அந்த நம்பிக்கை வீணா போச்சு

ஆகவே பத்திரிகையில் தொடர்ந்து வருகிற செய்திகள் ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்பட்டிருக்கிற மன வலிமையை தான் நான் இப்போ தொண்டர்களோடு மக்களோடு பகிர்ந்துக்கிறேன் தனி மனிதனை விட கட்சிதான் பெருசு இந்த இயக்கம் நல்லா இருக்கணும் இந்த இயக்கம் மீண்டும் அம்மா ஆட்சி வரனும்.

தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி இருக்கணும் 40% 50% 60% வாக்குகளை உயர்த்துவோம் நம்பிக்கையோடு மக்களை சந்திப்போம்.

எடப்பாடியார் 98,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து அவருடன் போட்டியிட்ட 7 பேர் ஜெயிச்சிருக்காங்களே அதே மாதிரி தமிழ்நாடு முழுவதும் மக்கள் வாக்களிக்கிற காலம் கனிந்து நிச்சயம் வரும் நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பிக்கையோடு களம் செல்வோம்.

பத்திரிக்கையில் வருகிற செய்திகளுக்கு எல்லாம் ஒரு என்டு கார்டு போடுங்க ஏன்னா தொண்டர்கள் வந்து ரொம்ப வேதனையில் இருக்காங்க அவருடைய வேதனையை போக்குகின்ற வகையில் மூத்தவர்கள் முன்னவர்கள் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இனி மீண்டும் எள் முனையளவும், கடுகளவும் பின்னடைவு இல்லாமல் எந்த சிதைவும் ஏற்படுத்தாமல் அண்ணா திமுக தான் உயிர், எடப்பாடியார் தான் உலகம் என்று உழைத்துக் கொண்டிருக்கிற தொண்டர்களை நாம் கருத்தில் கொண்டு கவனத்திலே கொண்டு
புதிய வரலாற்றை அண்ணா திமுகவுக்கு பெற்றுத் தர அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும் எனக் கூறினார்.