• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

டெங்கு பரவும் அபாயம் – பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் நேரில் ஆய்வு…

ByAjmalkhan saleemraja

Oct 14, 2026

தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபரி ஐங்கரன் பேட்டி அளித்துள்ளார்.

தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில் தேனி நகராட்சிக்குட்பட்ட 1,2 வார்டு பகுதிகளில் பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் நேரில் சென்று குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும் அவைகள் முறையாக தரம் பிரிக்கப்படுகிறதா என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து தேனி – அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை செய்த பின் செய்தியாளர் சந்தித்து பேசிய எம்எல்ஏ சபரி ஐங்கரன்..,

பணியாளர்களின் பற்றாக்குறையாலும், நிர்வாக சிக்கலாலும் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவரிடம் பிரச்சினைகளை எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தேனி – பெரியகுளம் நெடுஞ்சாலையில் அதிகமாக இருக்கும் வேகத்தடையால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட தாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.

நான் இந்த சாலையில் லிப்ட் கேட்டு சென்று உள்ளேன், பைக்கில் சென்றுள்ளேன் தற்போது அரசு வாகனத்தில் செல்கிறேன் எனக்குமே இதனால் பாதிப்பு உள்ளது, இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.