

வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் பல்வேறு பொது நிருவனங்கள் தாமக முன் வந்து பொது மக்களுக்கு பலவேறு உதவிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ள நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இணைப்பில் பெயர், தொடர்பு எண், மண்டலம், எந்த வகையில் உதவ விரும்புகிறீர்கள் என்பதை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பதிவு செய்தவர்கள் பேரிடர் கால நிவாரண பணிகளில், மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
