கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், மீட்புப்பணிகளை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் – அருண் ராய், திருச்சி – ஜெயகாந்தன், வேலூர் – நந்தகுமார், நாகை – பாஸ்கரன், மதுரை – வெங்கடேஷ், ராணிப்பேட்டை – செல்வராஜ், திருவள்ளூர் – அனந்தகுமார், அரியலூர், பெரம்பலூர் – அனில் மேஷ்ராம், விருதுநகர் – காமராஜ், ஈரோடு – பிராபகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுவர் என்றும் தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.