• Thu. Apr 18th, 2024

வேதியியல் பாட மதிப்பெண் பொறியியல் சேர்க்கைக்கு கட்டாயமா? – உயர்கல்வித்துறை அதிரடி!…

By

Aug 23, 2021

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயம் இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை அடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு ஆகியவற்றை கணக்கிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில்,

கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் என இருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். மாணவர்களின் குழப்பத்தை போக்கும் விதமாக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேதியியல் மதிப்பெண் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை 10ம் வகுப்பு மதிப்பெண்ணுடன், 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் விருப்ப பாடத்தின் மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *