முக்கூடல் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்டம் முக்கூடல் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறுவதற்கு கழக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றும் அதற்கான நடைமுறைகளை களத்தில் கொண்ட வர வேண்டும் எனவும் தலைமை கழகம் யாரை வேட்பாளராக அறிவித்து விடுவோம் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை என்றும் பேசினார்.
கூட்டத்தில் பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து முக்கூடல் பேரூர் கழக செயலாளர் லட்சுமணன் பாப்பாக்குடி யூனியன் சேர்மன் பூங்கோதை சசிகுமார் மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணிமுத்து பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைகுட்டி பாண்டியன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.