

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்றனர். போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் நல்லேந்திரன் (38). பஸ் ஸ்டாப் அருகே செல்போன் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கீ போர்டு, 4 செல்போன்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடனும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பை ஏற்டுத்தியது.

