• Wed. Mar 22nd, 2023

ஆண்டிபட்டியில் விவேகானந்தரின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் வீரத்துறவி விவேகானந்தரின் 159 -ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா ,இளைஞர்களின் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த விவேகானந்தரின் முழு உருவ படத்திற்கு மாலை அணிவித்து, பூக்களைத் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜேஷ், ஒன்றிய தலைவர்கள் கணபதி ,தினேஷ், நகரச் செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இதனைத் தொடர்ந்து இளைஞர் அமைப்பினர் உறுதியான புதிய பாரதம் அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .இதனையடுத்து அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வுக்காக வழிப்போக்கர்கள், வாகனங்களில் பயணம் செய்வோர், பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு முக கவசங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சபரி, பிரசன்னா ,ராஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப்போலவே தேனிலும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமைய ராஜன் தலைமையில் ,நகர தலைவர் விக்னேஷ் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *