• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனியில் மருத்துவமனை டீனுக்கு, மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு பாராட்டு!

மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில், சிறப்பாக பணியாற்றி வரும் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.பாலாஜி நாதனுக்கு, மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம்., முத்துராமலிங்கம் (வழக்கறிஞர்) சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் நோயின் தீவிரத்தை பொறுத்து, உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சூழ்நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய் தொற்று வேகமெடுத்துள்ளதால், அதிலிருந்து மக்களை காப்பாற்ற தீவிர சிகிச்சைக்காக ‘கொரோனா சிறப்பு வார்டுகள்’ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வார்டுகளில் டாக்டர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது போன்ற நோய் தடுப்பு பணியில் சிறப்பு கவனம் செலுத்தி வரும், மருத்துவமனை டீன் R.பாலாஜி நாதனை கவுரப்படுத்தும் விதமாக, தேனி மாவட்ட மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம்., முத்துராமலிங்கம் (வழக்கறிஞர்) சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அவருடன் வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம், தேனி சோல்ஜர் அகாடமி நிறுவனர் A. சின்னச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர்.