• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

ByA.Tamilselvan

Oct 6, 2022

மத்திய கல்வி திட்டத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு.
தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகின்றன. மத்திய கல்வி வாரியத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. சில பள்ளிகள் 29, 30-ந்தேதி முதல் விடுமுறை அளித்தன. ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வகுப்புகள் தொடங்கி உள்ளன.