• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காலாண்டு விடுமுறை நிறைவு.. பள்ளிகள் திறப்பு…

Byகாயத்ரி

Oct 10, 2022

தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு செப்டம்பர் 30ல் முடிவடைந்ததை அடுத்து, அக்.1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்த காலாண்டு விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதில்,அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, இன்று முதல் மூன்று நாட்கள் எண்ணும், எழுத்தும் பயிற்சி நடக்கிறது. இதனால், அரசு பள்ளிகளில் மட்டும், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.