

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இத்தேர்வில் 88.39சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 4, 2025 அன்று முடிவடைந்தது. மொத்தம் 19299 பள்ளிகளில் 7330 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 16,92,794 பேர் தேர்வினை எழுதினார்கள் அதில் 14,96,307 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் cbseresults.nic.in., results.cbse.nic.in., cbse.gov.in.. results.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டைவிட 0.41சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் 91சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

