• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

மே 16ல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Byவிஷா

May 14, 2025

வருகிற 16 ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
அன்றைய தினம் காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும்இ பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும்இ தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.