• Wed. Feb 19th, 2025

தமிழகத்திற்கு கிடைக்குமா தண்ணீர்?… இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தனர்

அதே நேரத்தில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு, உறுதியாக உள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என கூறப்படுகிறது.