பெங்களூருவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் திமுக எம்.எல்.ஏ. மகன் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கோரமங்கலா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியது.
இந்த கோரவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் திமுக எம்.எல்.ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் காரைச் ஓட்டிச் சென்றதும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்தில் திமுக எம்.எல்.ஏ.மகன் கருணாசாகர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.