• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்

ByA.Tamilselvan

Jun 4, 2023

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறும்போது .. ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் ரெயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்கும் வகையில் நடைபெறுவதாக கூறினார்.