• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கவிதைகள்

  • Home
  • கவிதை: பேரழகனே!

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., பாடாய் படுத்துகின்றாய்நான் படும்பாட்டைபார்த்துப் பார்த்து ரசிக்கின்றாய்…. உனக்கென்ன நேருக்கு நேர்விழி பார்த்துஒரு சிரிப்பு சிரிக்கிறாய்ஈரக்கொலை நடுங்க நானல்லவாஇம்சிக்கப் படுகிறேன்…. போடா பேரழகாஉன்னைக் காணும் போதெல்லாம்நான் காணாமல் போய்விடுகின்றேன் இதென்னடா அதிசயமாக இருக்கிறதுஎன் வானத்து நட்சத்திரங்கள்உன் ஒற்றைப் பார்வையிலேயேஉதிர்ந்து விட்டது உன்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., என் கவி நாயகனே !!எப்போதும் இறுக்கமாகஇராதே … வாழ்க்கை சுவாரஸ்யம்நிறைந்தது …ரசித்துப் பழகுநீயும் ரசிக்கப்படுவாய்..! பறந்து செல்லும்பட்டாம் பூச்சியைபட்டென்று பிடித்து அதன்இறக்கையின் வண்ணத்தைஉன் நெற்றியில் பொட்டாக்கிகாசு கிடைக்குமென்றுகனவு நீ கண்டதுண்டா ?நான் கண்டிருக்கிறேன்..! சில நொடிகளில் கட்டிடும்சிலந்தியின் வீட்டைஇமைக்காமல் பார்த்து…

கவிதை: பேரழகனே!

பேரழகா.., இன்னும் ஒருஜனனத்தையேநான் வேண்டுகிறேன் ! என் வாழ்வின்நாட்குறிப்பு புத்தகத்தில் விட்டுப்போன பக்கங்களை எல்லாம்உனை கொண்டு நிரப்ப ! சுகமோ அல்லது சோகமோஉன் விரல் பற்றிநடக்கும் நெடுந்தூர வேண்டுமடா பள்ளம் மேடுகள் கடக்கையில்“பார்த்துவா” எனும் உன்கரிசனம் வேண்டுமடா பாதி தூக்கத்தில்உன் நெற்றி…

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., ஒத்தையடிப் பாதையிலேமாமன் உன் நெனைப்போட…பாவிமக நானும் தளர்ந்த நட நடக்க… சுற்றுப்புறம் எல்லாம் நீ இல்லாமசூன்யமாய் போனதடா… நாம் இருவரும் பேசித் திரிந்த வாய்க்கால் வரப்பு கரை… ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையார் கோவில்… குயில்கள் கூவும் மாந்தோப்பு… அந்த வழி…

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., முரடன் உன் கைகளின்வெப்பச்சூட்டில் உருகி….நான் தொலைந்து தான் போகிறேன் … இளைப்பாறுகிறேன் நான் உன்பேரன்பின் ஒளியில்…வலசை பறவையென..! மாபெரும் நேசத்திற்குள் மொத்தஅபத்தங்களையும் புதைத்து வைத்துபரிணமிக்கிறேன்பரிசுத்தமாய் உன் பாதசுவடு தேடி… வாழ்க்கையின் பெருஞ்சாபம்நீயில்லாத கணங்களில்முற்றுப்பெறாத உன் நியாபகங்கள்… தேன் நிறைத்து இதழொற்றிநீ…

கவிதை ..!

பேனாக்கள்.., எண்ணற்ற பேனாக்கள் இங்குதான் எழுதுகின்றன தன் மூ(ளை)டியை திறந்து கற்பனைகளை கொட்டுகிறது..! அறிவற்ற பேனாக்கள் சில!அசிங்கத்தை எழுதுகிறது!ஆர்வத்தில் சிலதுகள் அர்த்தமற்று எழுதுகிறது! தாண்டிச் செல்வதன்றி தகராறு நமக்கெதற்கு! அழகாய் எழுதுகிறதென்று வளர்வதற்கு வாழ்த்துகள் சொன்னபோதும்..! சில கர்வப்பேனாக்கள் அதை கண்டுகொள்வதிலலை..!தானும்…

கவிதை 7: பேரழகனே!

பேரழகனே.., கணம் கணம் மனதில்கனம் ஏறுகிறதடா… உன் பேரழகியின்காத்திருப்பைக்கடினமாக்காமல்விரைவில் வா எந்தன்கண்ணாளனே! உடலோடு உயிர்இருப்பது போல்என் ஞாபகம்உன்னுள் இருக்கிறதா..! பேரழகா நீயேகதியென்று உன்னையே,மதியேற்றி தினமும்காத்திருக்கும் என்னுள்உன் அபரிமிதமானநேசத்தைஇதமாய்ப் பொழியவிரைவில் வாஎன் மாயனே..! என் பேரழகாஎனக்கெனஉயிர்பெற்றெழுந்தபழமுதிர் சோலை நீயடாஒய்யாரமாய்ச்சாய்ந்துஓய்வெடுக்கத்தோள் கொடு தோழனே..! பூவையைத்தாங்க…

கவிதை 5: பேரழகனே!

பேரழகனே.., கடுகளவும் இங்கேஎட்டவில்லை தூக்கமுமேகண்களுக்கே… முத்திரை இட்ட வதனமேநிற்கின்ற இதயத்தின்நினைவுகளுக்கோஇங்கு கொஞ்சமும்பஞ்சமில்லை… கண்களுக்குள் நிற்கும்கண்ணாளனே… என் எண்ணங்களில்ஊஞ்சலாடும் பேரழகனே… உன் நேசமின்றி எனக்கேது நித்திரையும்இங்கே..! கவிஞர் மேகலைமணியன்

கவிதை 5: பேரழகனே..!

பேரழகனே.., என்பேனா எண்ணற்றஎழுத்துகளை அறிந்திருந்தும்உன்னைஎழுத அச்சப்படுகிறதுஎன்பேனா…..? இல்லைகலித்தொகைகுறுந்தொகைஎழுதிய புலவரும் கூடவடிக்கவியலாத கவிதை காவியம் நீஅப்படியிருக்க நானென்ன எழுதசிறப்பாய் உன்னை பற்றிஎன்பேனா …..? இல்லைகூர்மழுங்கியதாய்உள்ளதேஎன்பேனா போலஎன்சிந்தையும்என்பேனா ….? என் எண்ண அலைகளில் பேரழகா பேரழகா என உருவேற்றி பிதற்றி எழுதும் எழுத்து என்பேனா….…

கவிதை : பேரழகனே!

பேரழகனே.., என் மனம் எனும் யன்னலினூடேமின்னலாய் நுழைந்தவனே… தென்றலாய் வீசிக்கொண்டிருந்தஇதயத்தில் சுனாமி வீசச்செய்தவனே.. என் கனவில் நீ வந்து கன்னத்தில் இட்டமுத்தம் கற்கண்டாய் தித்தித்து இன்னும் ஈரப்பதமாகவே இருக்கிறது தெரியுமா?? உன் மீது நான் கொண்ட நேசிப்பை வார்த்தை கொண்டு வர்ணிக்க…