• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jul 21, 2026

சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

கருத்து சொல்லவிடாமல் அச்சுறுத்துவது என்பது தவெக ஆட்சியுடைய நடைமுறைகளில் ஒன்றாக உள்ளது. தன்னை எதிர்க்கக் கூடியவர்களை எதிரணியில் இருப்பவர்களை ஒடுக்க வேண்டும் அடக்க வேண்டும் என எண்ணும் ஆட்சி நிலைப்பாட்டை, அறிந்தவர்களும் அறிஞர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மிரட்டலாக தான் அர்த்தம்.

அதிமுகவில் இருந்து பற்று எம்ஜிஆர், புரட்சித்தலைவர் அம்மா மீது பாசம் கொண்டவர்கள் எடப்பாடியாரை தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் யாரும் இயக்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள். அப்படி வெளியேறுபவர்கள் வேறு ஒரு காரணத்தை முடிவெடுத்து விட்டு அதற்கு காரணம் தேடுகிறார்கள்.

அதிமுகவிலிருந்து யாரும் வெளியேறவில்லை.. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் போயிருக்கிறார்கள்.

போனவர்களுக்கு பல காரணங்கள் உள்ளது அதே சமயத்தில் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியாரை சந்தித்து இணைந்து கொண்டிருக்கிறார்கள் வரவும் இருக்கிறது செலவும் இருக்கிறது.

அதிமுக பலமான இயக்கமாகத்தான் இருக்கிறது. பலம் பொருந்தி தலைவராக தான் எடப்பாடியாரை பார்க்கிறார்கள்.

தவெகவிற்கு போனவர்கள் பற்றி நம்ம வருத்தப்பட தேவையில்லை அவர்கள்தான் வருத்தப்பட வேண்டும்..

தவெக ஆட்சியைப் பொருத்தவரைக்கும் பலமுறை சொல்லிவிட்டேன் சீரியஸாக எதையும் அணுகமாட்டார்கள் மக்கள் பிரச்சனையை சீரியஸாக அணுகாமல் விளையாட்டுத்தனமாக அணுகுகிறார்கள் இந்த நிலை மாற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அதிமுகவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியாருடைய சமீப காலத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அந்த சூழ்நிலை மீண்டும் உருவாகும்.

அதிமுக அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கிய இயக்கம். வந்தவர்கள் அனைவரையும் வாழவைக்கும் இயக்கம் அதனால் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அதற்கான சூழ்நிலை வரும்.

கைது நடவடிக்கை சிறைக்கு செல்வது கோர்ட்டுக்கு செல்வதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சகஜம்.. இரும்பு கரம் கொண்டு அடக்கக்கூடிய இந்த அரசியல் நடவடிக்கையை கண்டு அதிமுக ஒருபோதும் பயப்படாது சந்திக்க தயாராக உள்ளோம்.

மக்கள் பிரச்சனைகள் முன்னின்ற எடப்பாடி யார் அறிவிக்கும் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதிமுக வலிமையாக இந்த அரசை எதிர்க்கும் அப்படி ஒரு சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் மனப்பூர்வமாக சந்திக்கக் கூடியவர்களாக நாங்கள் இருப்போம். என்றார்.