தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டம் ரத்து
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க…
அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையம் தொடக்கம்
வளைகுடா நாடான அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும் எனத்…
தமிழகத்தில் எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் சரியாக நடப்பதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிக மிக…
ரத சப்தமி நாளில் ஏழு வாகனங்களில் காட்சியருளும் ஏழுமலையான்
நாளை ரத சப்தமி நாளை முன்னிட்டு, திருப்பதியில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த ஒரே நாளில் மட்டும் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறுகிறது. இந்த நாளை மினி பிரம்மோற்சவம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.ரத சப்தமியன்று காலை…
இன்று சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இன்று பிப்ரவரி 15ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒரு சேர…
மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது
மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது- நிறுவனத் தலைவர் – சா.அருணன் – அறிக்கை அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்…
டெல்லியில் 2வது நாளாக பேரணியைத் தொடங்கிய விவசாயிகள்
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தொடங்கிய விவசாயிகள் பேரணி இன்று 2வது நாளாக தொடர்கிறது.நேற்று விவசாயிகளின் பேரணியைத் தடுப்பதற்காக, பல்வேறு இடங்களில் தடுப்புகளை போட்டிருந்தாலும், அதையும் மீறி விவசயிகள் சென்றதால், ஹரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் மீண்டும் கண்ணீர் புகை…
கோவாவில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட ஆஸ்தா ரயில்
கோவாவில் இருந்து முதல் ஆஸ்தா ரயில் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் 2000 பக்தர்கள் பயணம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை முன்னிட்டு, இந்திய ரயில்வே நாட்டின் பல நகரங்களில் இருந்து, அயோத்திக்கு 200-க்கும் மேற்பட்ட…
ரேபரேலி தொகுதியில் முதல்முறையாக களமிறங்கும் பிரியங்காகாந்தி
வருகிற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியாகந்தி மகள் பிரியங்காகாந்தி முதல்முறையாக களமிறங்குகிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 1999-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி…
கர்நாடகாவில் இதிகாசங்கள் பற்றி தவறாக பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம்
கர்நாடாகாவில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவை உண்மையல்ல என்று மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் தெரேசா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருட்சகோதரி பிரபா (32) சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி…



