• Sun. May 5th, 2024

மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது

ByKalamegam Viswanathan

Feb 14, 2024

மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது- நிறுவனத் தலைவர் – சா.அருணன் – அறிக்கை

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட ஆண்டு எதிர்கால வாழ்வாதாரா கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் 15 .02.2024 அன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளது இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது அதாவது பனிரெண்டாம் வகுப்பு , பதினோராம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பொதுத் தேர்வு நடைபெற உள்ளது அதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் உட்பட கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாலும் நாளை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் 26ம் தேதி நடக்கும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்திலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என தெரிவித்துக்கொள்கிறேன்.

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *