• Wed. Apr 24th, 2024

விருதுநகர்

  • Home
  • திருவில்லிபுத்தூர், மழை வெள்ளத்தால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை…..

திருவில்லிபுத்தூர், மழை வெள்ளத்தால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள யாதவர் தெரு, சேடக்குடி தெருக்களில் வசிக்கும் மக்கள் கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட பெருமழையால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பியது.…

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார். எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…

திருவில்லிபுத்தூர் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து.., 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்ககுமார் (50). இவர் திருவில்லிபுத்தூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலையில் கடைக்குச் சென்ற முத்துராமலிங்ககுமார், கடைக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்து…

திருவில்லிபுத்தூர் அருகே, ரயில்வே சுரங்கபாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள சிவகாசி சாலையில் இருந்து, அச்சம்தவிழ்த்தான் செல்லும் சாலையில், அத்திகுளம் கண்மாய் கரை பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சித்தாலம்புத்தூர், அத்திகுளம், அச்சம்தவிழ்த்தான், நாச்சியார்கோவில், அணைத்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு…

தேவதானத்தில் அயலகத்தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களைத் தேடி கிராமத்தில் ஒரு நாள் – தமிழர் பாரம்பரிய பண்பாடு, பொங்கல் விழா..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் தேவதானத்தில் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களைத் தேடி கிராமத்தில் ஒரு நாள் என்ற தலைப்பில் தமிழர் பாரம்பரிய பண்பாடு மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சி தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ், எம்.குமார் மற்றும்…

காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்…

காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து துறைகள் வாரியாக பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெற்று அவற்றை காலதாமதமின்றி நிறைவேற்றி கொடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை…

இராஜபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் கடந்த 10 தினங்களாக ஒவ்வொரு பகுதி வாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 40, 41,42, பகுதியில் உள்ள வார்டுகளுக்கான மக்களை தேடி முதல்வர் திட்ட சிறப்பு முகாம் PACR நூற்றாண்டு…

திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், ரமண மகரிஷி ஜெயந்தி விழா அவருடைய பிறந்த இல்லத்தில் நடந்தது. திருச்சுழியில் உள்ள சுந்தர மந்திரம் இல்லத்தில், ரமண மகரிஷி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த வீட்டில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.…

இராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதியில் தேமுதிக தலைவரும் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் லோடுமேன் சங்கம் சார்பில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெண்கள் ஒப்பாரி வைத்தனர். அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் குருசாமி, ரமேஷ், பெருமாள், கந்தசாமி ஆகியோர்…

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கோரிக்கை கடிதம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்ததையொட்டி விருதுநகர் நாடாமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் மறைந்த விஜயகாந்த் அவர்கள் அருப்புக்கோட்டையில் பிறந்து, அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று, மதுரையில் வாழ்ந்து, வளர்ந்து கலைத்துறை மற்றும் அரசியலிலும் தமிழகத்தில் சாதனை…