• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா..,

ByRadhakrishnan Thangaraj

Mar 30, 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த 21– ஆம் தேதி பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினசரி மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

பின்னர் பூ வளர்க்ப்பட்டது. மாலையில் அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முக்கிய வீதி வழியாக சுற்றி வந்து பூக்குழி இறங்கினர்.

விழாவில் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.