• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!..,

ByK Kaliraj

Mar 30, 2026

சிவகாசியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியோடு, கொடியேற்றி வைத்து வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் வண்ண- வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, திரளான பக்தர்களின் ஓம்சக்தி!- பராசக்தி!! என்ற சரண கோஷத்துடன் கொடியேற்றத்தோடு முதலாம் நாள் திருவிழா தொடங்கியது.

பங்குனிப் பொங்கல் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அன்றாட ம் பக்தர்கள் மாரியம்மனுக்கு அக்னி சட்டிஎடுத்து, முடி காணிக்கையுடன், முத்து க்காணிக்கையும் செலுத்தி, மாவிளக்கெடுத்து, தவழும் பிள்ளை போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை கையிலேந்திசுமந்து சென்று கோவிலில் செலுத்தி, மாரியம்மனின்அருள் கூட்டும் செயல்கள் பல புரிந்து வருகின்றனர். திருவிழா நடைபெற்று வரும் காலங்களில் தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் கள் உபயமளிக்க, அன்றாடம் மாரியம்மன் வெள்ளி ஊஞ்சலிலும், சிம்மம், காமதேனு,கைலாச ப ர்வதம், வேதாளம், வெள்ளிரிஷபம், யானை, குதிரை, அன்னம் போன்ற வாகனங்களிலும், புஷ்பபல்லக்கிலும் சர்வ அலங்காரத்தோடு ரதத்தில் எழுந்தருளி, காலை மற்றும் இரவு வேளைகளில் முக்கிய சாலை களின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு க் காட்சி தந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

விழாக்களின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற( ஏப்ரல்)5–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல்விழாவும், மறுதினம் 6-ம் தேதி திங்கட்கிழமை கயர் குத்து திருவிழாவும்,8-ம் தேதி புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.