தேனி: ஒருமையில் பேசியதாக சி.இ.ஓ., மீது புகார்..
சங்க வேளையாக பேச சென்ற எங்க நிர்வாகிகளை போ…வா….என ஒருமையில் பேசிய, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி, தேனி மாவட்ட அரசு நிதி உதவி பெறும் நிர்வாகிகள் சங்கத்தினர், இன்று…
தேனி: ‘எஸ்கேப்’ ஆன தி.மு.க., கவுன்சிலர்கள்
தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ‘மல்லுக்கட்டு’ பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, வெற்றி பெற்ற கையோடு, தி.மு.க., கவுன்சிலர்கள் 19 பேரும் வெளியூருக்கு ‘எஸ்கேப்’ ஆன சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில்,…
தேனி: வைரலாகும் பைக் திருடன் வாக்கு மூலம்
தவறு செய்து மாட்டிக் கொண்டாலும், போலீசாரை திசை திருப்பும் வகையில் எந்தவித பதட்டமுமின்றி அழகிய தமிழில் வர்ணனையுடன் பேசும் பைக் திருடனின் வாக்கு மூலம் பலரையும் ரசிக்கும் படி இருந்ததால், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…
ஆண்டிபட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து நில மோசடி..,
பாதிக்கப்பட்டவர்கள் பத்திர பதிவு அலுவலகத்தை முற்றுகை போராட்டம்..!
போலி ஆவணங்களை வைத்து மோசடியாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட மோசடிக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமர்ந்து உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள…
ஆண்டிபட்டியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை; மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது . முதல் கட்டமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட பெட்டி தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் முரளிதரன் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது 18…
தேனியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; விபத்தில் 3 பேர் பலி
ஆண்டிபட்டி அருகே வேன் மற்றும் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 3 பேர் பலியாயினர். படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை மாவட்டம், செக்காணூரனியை சேர்ந்த 4 பேர் ஒரு காரில்…
அந்த நாள்… ஞாபகம்; நெஞ்சிலே வந்ததே…
போடியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்த, 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒருவருக்கொருவர் சந்தித்து, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தேனி மாவட்டம், போடியில் ஜமீன்தார் காமுலம்மாள்…
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; மார்ச் 15ல், மதுரையில் உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை நிர்வாக அதிகாரம் கேரளாவில் உள்ளதா? தமிழகத்தில் உள்ளதா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி, மார்ச் 15ல், மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…
தேனி: ‘கும்மாளம்’ போட்ட சுற்றுலா பயணிகள்..
பல மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மீண்டும் ‘கும்மாளம்’ போட வைத்த கும்பக்கரை அருவியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான இன்று (பிப். 20) ஞாயிறுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பிற மாவட்ட மக்கள் குடும்பத்தோடு வந்திருந்து குளித்து…
ஆண்டிபட்டி அருகே விநாயகர் மற்றும் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!
வைணவ கோவில்களில் பெருமாள் மற்றும் விநாயகரை மூலவராகக் கொண்டு இருகருவறைகளுடன் அமைந்த சிறப்புப்பெற்ற தனித்தன்மையான நூறுஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகவிழா.ஆண்டிபட்டியருகே சித்தயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வைணவ ஆலயங்களில்…




