காரைக்குடியில் இடியுடன் கூடிய பலத்த மழை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. காரைக்குடி ஸ்ரீராம் நகர் கோட்டையூர், பள்ளத்தூர், கண்டனூர், புதுவயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர்…
மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி.. 7 பேர் காயம்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அதிகாலை கார் நிலைதடுமாறி கவிழ்ந்து இளம் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது. மானாமதுரை அருகே தெற்குச்சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…
சைல்டுலைன் 1098 சார்பில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் நண்பன் வார விழா
சிவகங்கை மாவட்டம் சைல்டுலைன் 1098 சார்பில் நவம்பர் 14 முதல் 19 வரை குழந்தைகள் நண்பன் வார விழா கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக அரளிகோட்டை ஊராட்சியில் சிறப்பு திறந்த வெளி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சைல்டுலைன் உறுப்பினர் மலைக்கண்ணண் வரவேற்று…
கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்
இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார். இளையாங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக வந்த தகவலை அடுத்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி…
அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் பாரம்பரிய வார விழா துவக்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியன இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் பாரம்பரிய வார விழாவின் தொடக்க விழா நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம்…
சிவகங்கையில் உரம் தட்டுபாடு-பாஜகவினர் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டம். சிவகங்கை மாவட்ட விவசாயிகள் உர தட்டுபாட்டால் அவதியடைந்து வருவதாக கூறி, பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே கண்டன…
50 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் ஊரணிக்கு தண்ணீர் வரவழைத்த இளைஞர்கள்! கிராம மக்கள் பாராட்டு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழபட்டமங்கலம் ஊராட்சியிக்கு உட்பட்ட வெளியாரி கிராமம் ஒத்தவளவு பகுதியில் அமைந்துள்ள செங்கபள்ளம் (எ) கருப்பையா கோவில் ஊரணி இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு பூஜை மற்றும் ஏனைய சுபநிகழ்ச்சிகளுக்கு கோவில் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த…
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக இருவர் கைது..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்கலை ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனையடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர்…
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தங்கையை காப்பாற்றிய அக்கா
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி துரிதமாக காப்பாற்றி உள்ளார். அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. இந்த கிணற்றுக்குள் தனது தங்கை விழுந்ததைக்…
பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் – ஜி. கே வாசன் பேட்டி.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் இவ்வாறு கூறினார். மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற ஜி. கே. வாசன், வெள்ள…