• Wed. Dec 11th, 2024

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக இருவர் கைது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்கலை ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனையடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பேக்கரியின் அருகே டீகடையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.


அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் காரைக்குடி ஆறுமுகம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பதும், தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.


இதனையடுத்து,இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து,சுமார் 15 000 ரூபாய் பணம்,2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும்,இது போன்று தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தொடர்ந்து காரைக்குடி பகுதியில் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.