• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நான் சிறுவயதிலிருந்தே தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன்- அமர் கீத்..,

Byஜெ.துரை

Mar 10, 2026

சமீபத்தில் வெளியான “மயல்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்
அமர் கீத்.எஸ்

இவர் சேரன் பாண்டியன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் எம்.எஸ் மூர்த்தி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள
“99 /66” திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்துள்ளார்.
அமர் கீத்.

இவரது பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது, மட்டுமின்றி குறிப்பாக பின்னணி இசை பற்றி பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “96/66″திரைப்படத்தின் இசையமைப்பாளர் அமர் கீத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

நான் சிறு வயதில் இருந்தே எனது தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன்.

அதனால் இசை எனது ரத்தத்தில் ஊறிப் போய் உள்ளது.

ஆரம்ப காலகட்டங்களில் குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவைகளுக்கு இசையமைத்துள்ளேன்.

அதனைத் தொடர்ந்து எனது முதல் படமான “மயல்” எனக்கு ஒரு நல்ல பெயர் வாங்கித் தந்தது. தற்போது சினிமாவில் பின்னணி இசைக்கும் பின்னணி சவுண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பின்னணி சவுண்டு பட்டப்படிப்பை முடித்து இருக்கிறேன். தற்போது இரண்டு படங்களுக்கு நான் இசையமைத்து வருகிறேன். ஒரு படத்திற்கு பின்னணி இசையும் செய்து வருகிறேன்.

அது தவிர என் இசையில் தனி பாடல்களும் உருவாகி வருகிறது.

இசை ரசிகர்களுக்கு பிடித்தமான இசையை நான் நிச்சயம் நான் தருவேன்.என்று கூறினார்.