• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கணவன் மனைவி தற்கொலை!!

ByS.Ariyanayagam

Mar 10, 2026

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கணவன் – மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆரியநல்லூரை சேர்ந்த ராமையா(58) டீக்கடை நடத்தி வந்தார் இவரது மனைவி இந்திராகாந்தி(54) இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் கனவன் ராமையா மனைவி இந்திராகாந்தி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்படி சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுபத்ரா சார்பு ஆய்வாளர் நீலமேகம் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.